அல்லாஹ்........
அல்லாஹ்....... எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! படைப்பதும் - துயர் துடைப்பதும் என் தொழில். நானே தொட்டில் நானே சவப்பெட்டி! ஏற்றமும்,இறக்கமும் நானே! நீரும்,நெருப்பும் நானே! பிறப்பும், அழிவும் என்னில் என்பதனால்! எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! உரிமையளிப்பதும் நானே! மன்னிப்பளிப்பதும் நானே! என்னை இறைஞ்சினால் இறங்கிவருவேன் - என்னை மறந்து போனாலும் - நான் மறப்பதில்லை! மறுப்பதில்லை!! எனக்கு இங்கே நேர் - எதிர் மனிதன்!! கேள்வியும் நானே பதிலும் நானே ஆதியும் நானே அந்தமும் நானே என்பதனால்! எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! கமுதி மீராபட்டேல் ரஹ்மத் மாத இதழ், மே - 1994