நோன்பு யாரின் மீது கடமை?
நோன்பு யாரின் மீது கடமை? எனதருமை இஸ்லாமிய நண்பர்களே! பாக்கியம் நிறைந்த ரமழான் மாதத்தின் 3 ஆம் நாள் தராவீஹில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் நோன்பு யாரின் மீது கடமை என்பது பற்றிதான். நோன்பு என்றால் அல்லாஹ்விற்காக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும், இன்பம் சுகிப்பதை விட்டு நீங்கி இருப்பதுமாகும். மேலும் தேவையற்ற காரியங்களை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வதாகும். அல்லாஹ்விற்கு மிகப் பிடித்தமான அமல் நோன்பு. நோன்புக்கு நானே கூலி என்று ரப்பு சொல்வதிலிருந்தே நாம் நோன்பின் அந்தஸ்தை விளங்க வேண்டும். இந்த நோன்பில் மட்டும்தான் முகஸ்துதியை பார்க்க முடியாது. மற்ற அமல்கள் கூட முகஸ்துதியை (பிறருக்காகவோ, அல்லது பிறரின் பாராட்டை பெறவோ, பிறருக்கு) காட்டவோ செய்யமுடியும். ஆனால் நோன்பு மட்டும் ஒரு அடியான் தன் ரப்புக்காக, அவனது அன்பை பெறுகின்ற நோக்கில் இருக்கும். அதனால்தான் இறைநேசர்களும் , நல்அடியார்களும் நோன்பு நோற்ற நிலையிலேயே தன...