ரெகமெண்டேஷன் (பரிந்துரைத்தல்)
பரிந்துரைத்தல்
مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقِيتًا4:85
அன்பார்ந்த இஸ்லாமிய சொந்தங்களே, இன்று எல்லா துறைகளிலும் ரெகமெண்டேஷன் என்பது அத்தியாவசிய ஒன்றாக ஆகிவிட்டது.தகுதி இருப்பவர்கள் பின்தள்ளப்பட்டு ரெகமெண்டேஷனை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கல்வித்துறைகள், தொழிற்துறைகள்,அரசியல் துறை போன்ற பல துறைகளில் பலர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.தகுதி இருப்பவர்கள் கூட தகுதியை நிரூபித்தாலும் அவர்களுக்கும் பரிந்துரை செய்ய சில பிரபல்யங்கள் தேவைப்படுகிறார்கள் மேலும் அதற்காக பணபரிமாற்றங்களும் நடைபெறுகிறது.
ஆகவே பிறருக்காக பரிந்துரை செய்யலாமா? அப்படி செய்தால் அதற்காக கூலி பெறலாமா? இன்னும் அது சம்பந்தமாக இஸ்லாம் என்ன கூறுகிறது என்பது குறித்து பார்ப்போம் .
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:
இவ்வுலக தேவை சம்பந்தமாக ஒருவருக்குப் பலன் கிடைப்பதற்கு யாரிடம் கூறினால் கிடைக்குமோ அவரிடம் சென்று கூறி அப்பலன் அவருக்கு கிடைக்கச் செய்வதே சிபாரிசு ஆகும்.
2.அந்த சிபாரிசு நன்மையான,தேவையான,நியாயமான காரியத்திற்காக இருக்க வேண்டும்.
3.தீமையான,அநியாயமான அராஜக காரியத்திற்காக இருக்கக்கூடாது.
சிபாரிசுக்கான தகுதியும்,ஆற்றலும் இருந்தாலும் சிபாரிசு செய்வது மட்டும்தான் நம் கடமை. அதை ஏற்பதும் ,ஏற்க மறுப்பதும் அவரவர் மனதைப் பொருத்தது. மனித குலத்தின் வழிகாட்டி முஹம்மது நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நிறைய நபருக்கு சிபாரிசு செய்துள்ளார்கள். அந்த சிபாரிசை ஏற்றவர்களும் உண்டு, மறுத்துவர்களும் உண்டு.
அபூ மூஸா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்)அவர்களிடம் யாரேனும் யாசகர்கள் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும்) தமது தேவையை முறையிட்டால் அவர்கள் (தம் தோழர்களை நோக்கி) உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவி செய்யும்படி பரிந்துரையாவது செய்யுங்கள் அதனால் உங்களுக்கு நற்பயன் வழங்கப்படும் என்று கூறுவார்கள்.பிறகு அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை பூர்த்தி செய்கிறான் என்பார்கள்.(புகாரி:1432)
கஃபிப்னு மாலிக்(ரலி) கூறியதாவது: இப்னு அபீ ஹஜ்ரத் (ரலி) அவர்களிடம் நான் கொடுத்திருந்த கடனை பள்ளிவாசலில் வைத்துக்கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன.தமது வீட்டில் இருந்த நபி(ஸல்)அவர்களும் இந்த சப்தத்தை கேட்டார்கள்,உடனே தமது அறையின் திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்து கஃபே என்று அழைத்தார்கள் உடனே நான் இதோவந்தேன் அல்லாஹ்வின் தூதரே என்றேன்,பாதி என்பதை காட்டும் விதமாக சைகை மூலம் காட்டி உன்னுடைய கடனில் இவ்வளவை தள்ளுபடி செய்வீராக! என்று கூறினார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே என்றுகூறினேன்.(கடன் பெற்ற) இப்னு அபீ ஹஜ்ரத்(ரலி)விடம் எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக! என்று நபி(ஸல்) கூறினார்கள்.
மேற்கூறப்பட்ட நபி மொழிகளிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சிபாரிசை தோழர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விளங்குகிறோம்.சில சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்து அதை ஏற்காத நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது , (என் தந்தை) அப்துல்லாஹ் அவர்கள் உஹது போரில் ஷஹீதாக கொல்லப்பட்டார்கள். அவர்கள் மரணிக்கும்போது பல குழந்தை குட்டிகளையும், கடனையும் விட்டுச் சென்றார்கள் ஆகவே (அந்த கடனுக்கு நான் பொறுப்பாளியான காரணத்தினால்) என் தந்தையின் கடனிலிருந்து சிறிதளவு தள்ளுபடி செய்து (குறைத்து) விடும் படி
கடன்காரர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவர்கள் சிறிதளவும் தள்ளுபடி செய்ய மறுத்து விட்டார்கள். ஆகவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கடன்காரர்களிடம் எனக்காக பரிந்துரை செய்யும்படி கேட்டேன். நபியவர்கள் அவ்வாறு பரிந்துரை செய்தும் அவர்கள் சிறிதளவும் தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டனர். எனவே,நபி(ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சங்கனிகளின் ஒவ்வொரு வகையையும் தனித்தனியாக பிரித்து வையுங்கள் .இத்க் இப்னு ஜைத் எனும் உயர்ரக பேரித்தம்பழங்களை ஒரு பக்கமும் லீன் எனும் தாழ்ந்த வகை பழத்தை ஒரு பக்கமும் அஜ்னா எனும் சிறப்பு ரகப் பேரித்தம்பழத்தை இன்னொரு பக்கமும் தனித்தனியாக பிரித்து வையுங்கள்.பிறகு கடன்காரர்களை வரவழையுங்கள், பின்னர் நான் உங்களிடம் வருகிறேன் என்று சொன்னார்கள்.நான் அவர்கள் கூறியபடியே செய்தேன்.பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்து பேரீச்சங்குவியலின் அருகே அமர்ந்து கொண்டு கடன்காரர் ஒவ்வொருவருக்கும் அளந்து கொடுக்கலானார்கள்.(இறுதியில்) நிறைவாக அனைவருக்கும் கொடுத்து முடித்தார்கள். பேரித்தம்பழக்குவியல் யாருடைய கரமும் படாததைப் போன்று முன்பு இருந்ததைப் போன்று (சற்றும்குறையாமல்) அப்படியே இருந்தது. (புஹாரி:2405)
இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: பரீரா(ரலி)வின் கணவர் அடிமையாக இருந்தார்,அவருக்கு முகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும்,.அவர் (தம் மனைவி பரீரா தன்னை பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது தமது) தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்று இருக்கிறது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஙீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும்,பரீரா முஙீஸின் மீது வைத்துள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள்.(முஙீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் (பரீராவிடம்) முஙீஸிடம் திரும்பி செல்லக்கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே எனக்கு தாங்கள் கட்டளை இடுகிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்கு தேவையில்லை என்று கூறிவிட்டார். (புகாரி:5283)
பரீரா(ரலி) அவர்களும் ,ஜாபிர் (ரலி) அவர்களின் கடன்காரர்களும் நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்தும் ஏற்கவில்லை. அதற்காக நபி(ஸல்) அவர்கள் வருத்தப்படவோ,சபிக்கவோ இல்லை,ஆகவே நம்முடைய சிபாரிசை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை என்பது தெரிகிறது.அதே சமயத்தில் நியாயமற்ற, தீமையான காரியங்களுக்காக யாரேனும் சிபாரிசு செய்தால் அதை கடுமையாக கண்டித்துள்ளார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: மக்ஸூமி குலத்தைச் சார்ந்த ஒரு பெண் திருடிவிட்டால் என்ற செய்தி குறைஷியருக்கு கவலை அளித்தது. அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காக) நபியிடம் பரிந்து பேச முடியும்? என்று சொன்னார்கள்.அவ்வாறே,உசாமா(ரலி)அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்து பேசினார்கள் .அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டு விடுமாறு) பரிந்துரைக்கிறாய்? என்று கேட்டுவிட்டு பிறகு எழுந்துநின்று கூறினார்கள். மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூஇஸ்ராயீல்) மக்கள் அழிந்து போனதற்கு காரணமே அவர்களிடையே உள்ள உயர்குளத்தார் திருடிவிட்டால் அவர்களை தண்டிக்காமல் அவர்கள் விட்டுவிடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக (இந்த) முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் ஃபாத்திமாவின் கையை துண்டித்து இருப்பேன் .(புஹாரி:6788)
எனவே,தன் தேவை முன்னிட்டு யாரேனும் சிபாரிசுக்கு அணுகினால் அதை செய்வதை விட்டும் எந்தவொரு முஸ்லிமும் விலகிக்கொள்ளக்கூடாது. பிடித்தவர்,பிடிக்காதவர்,பணக்காரர், ஏழை என்ற பாகுபாடெல்லாம் பார்க்கக்கூடாது. ஒரு நல்ல காரியத்திற்காக தகுதியுள்ளவர் பரிந்துரை செய்ய நாடினால் உடனே, நமது சக்திக்கேற்ப முயற்சி செய்ய வேண்டும்.
ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பிரிந்துகொண்ட தம்பதியினருக்கு மத்தியிலும், குடும்பங்களின் உறவுகளுக்கு மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்தும் பொருட்டு அதற்கு தகுந்த மத்தியஸ்தர்களை அணுகி சிபாரிசு செய்வதும், கல்வித்துறைகள், தொழிற்துறைகள் போன்றவற்றை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தக்க மனிதர்களிடம் சென்று சிபாரிசு செய்வது நன்மை தரக்கூடிய செயல்களாகும். இந்த பரிந்துரைக்கு அல்லாஹ்விடம் தகுந்த கூலி உண்டு.
ஆனால் ,அதே நேரத்தில் தீமையான காரியத்திற்கும், பொய்யாகவும் பரிந்துரைத்தால் அதற்கான குற்றமும் அவருக்கு உண்டு. இதையே அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
அதேபோல பரிந்துரைத்தல் என்பது நல்ல செயல் ஆகவே பரிந்துரையை உலக ஆதாயத்திற்காகச் செய்வதோ, அல்லது அதற்காக கூலி பெறுவதோ ஹராமாகும். நாம் தேர்தலின்போது நல்ல தலைவர்களை தேர்வுசெய்வது நம்முடைய பொறுப்பும், கடமையுமாகும். ஒரு தலைவரை பரிந்துரைப்பதற்காக கூலி பெறுவது ஹராமாகும். இது லஞ்சம் என்பதாக கவனிக்கப்படும். வாங்கிய பணத்திற்காக ஒரு தீயவனை தலைவனாக்க பரிந்துரைப்போமானால் அவன் செய்கிற அனைத்து அநியாயத்திலிருந்தும் நமக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை உணர்ந்து பரிந்துரைத்தல் என்ற அமானிதத்தை ஹலாலான முறையில் பயன்படுத்தி அல்லாஹ்வின் அன்பைப் பெறுவோமாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
ஆகவே பிறருக்காக பரிந்துரை செய்யலாமா? அப்படி செய்தால் அதற்காக கூலி பெறலாமா? இன்னும் அது சம்பந்தமாக இஸ்லாம் என்ன கூறுகிறது என்பது குறித்து பார்ப்போம் .
அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:
” யாரேனும் ஒரு நன்மையான செயலுக்குப் பரிந்துரைத்தால் அதன் நன்மையில் ஒரு பங்கு அவருக்கும் உண்டு அதேபோல யாரேனும் ஒரு தீய செயலுக்குப் பரிந்துரைத்தால் அதன் குற்றத்தில் அவருக்கும் ஒரு பங்கு உண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்”. (அல் குர்ஆன்: 4:85)
ஒருவர் மற்றொருவரின் நன்மைக்காக ஏதேனும் ஒரு வகையில் சிபாரிசு செய்வாரானால் அதனால் அவருக்குக் கிடைக்கும் நன்மையில் சிபாரிசு செய்த அவருக்கும் பங்கு உண்டு. ஒரு தீய காரியம் பரவுவதற்கு சிபாரிசு செய்து அது பரவினால் அதனை செய்பவர்களின் குற்றங்களில் சிபாரிசு செய்த அவருக்கும் பங்கு உண்டு.இவ்வுலக தேவை சம்பந்தமாக ஒருவருக்குப் பலன் கிடைப்பதற்கு யாரிடம் கூறினால் கிடைக்குமோ அவரிடம் சென்று கூறி அப்பலன் அவருக்கு கிடைக்கச் செய்வதே சிபாரிசு ஆகும்.
இந்த வசனத்தில் மூன்று கருத்துகள் அடங்கியுள்ளது.
1.யாரேனும் சிபாரிசுக்கு வேண்டினால் அதற்கான தகுதியும்,ஆற்றலும் அவரிடம் இருக்குமேயானால் மட்டுமே சிபாரிசு செய்ய வேண்டும்.2.அந்த சிபாரிசு நன்மையான,தேவையான,நியாயமான காரியத்திற்காக இருக்க வேண்டும்.
3.தீமையான,அநியாயமான அராஜக காரியத்திற்காக இருக்கக்கூடாது.
சிபாரிசுக்கான தகுதியும்,ஆற்றலும் இருந்தாலும் சிபாரிசு செய்வது மட்டும்தான் நம் கடமை. அதை ஏற்பதும் ,ஏற்க மறுப்பதும் அவரவர் மனதைப் பொருத்தது. மனித குலத்தின் வழிகாட்டி முஹம்மது நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நிறைய நபருக்கு சிபாரிசு செய்துள்ளார்கள். அந்த சிபாரிசை ஏற்றவர்களும் உண்டு, மறுத்துவர்களும் உண்டு.
அபூ மூஸா(ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்)அவர்களிடம் யாரேனும் யாசகர்கள் வந்தால் அல்லது அவர்களிடம் (எவரேனும்) தமது தேவையை முறையிட்டால் அவர்கள் (தம் தோழர்களை நோக்கி) உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவி செய்யும்படி பரிந்துரையாவது செய்யுங்கள் அதனால் உங்களுக்கு நற்பயன் வழங்கப்படும் என்று கூறுவார்கள்.பிறகு அல்லாஹ் தன் தூதருடைய நாவினால் தான் நாடியதை பூர்த்தி செய்கிறான் என்பார்கள்.(புகாரி:1432)
கஃபிப்னு மாலிக்(ரலி) கூறியதாவது: இப்னு அபீ ஹஜ்ரத் (ரலி) அவர்களிடம் நான் கொடுத்திருந்த கடனை பள்ளிவாசலில் வைத்துக்கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன.தமது வீட்டில் இருந்த நபி(ஸல்)அவர்களும் இந்த சப்தத்தை கேட்டார்கள்,உடனே தமது அறையின் திரையை விலக்கிக்கொண்டு வெளியே வந்து கஃபே என்று அழைத்தார்கள் உடனே நான் இதோவந்தேன் அல்லாஹ்வின் தூதரே என்றேன்,பாதி என்பதை காட்டும் விதமாக சைகை மூலம் காட்டி உன்னுடைய கடனில் இவ்வளவை தள்ளுபடி செய்வீராக! என்று கூறினார்கள். அவ்வாறே செய்கிறேன் அல்லாஹ்வின் தூதரே என்றுகூறினேன்.(கடன் பெற்ற) இப்னு அபீ ஹஜ்ரத்(ரலி)விடம் எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக! என்று நபி(ஸல்) கூறினார்கள்.
மேற்கூறப்பட்ட நபி மொழிகளிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சிபாரிசை தோழர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை விளங்குகிறோம்.சில சந்தர்ப்பங்களில் நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்து அதை ஏற்காத நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது , (என் தந்தை) அப்துல்லாஹ் அவர்கள் உஹது போரில் ஷஹீதாக கொல்லப்பட்டார்கள். அவர்கள் மரணிக்கும்போது பல குழந்தை குட்டிகளையும், கடனையும் விட்டுச் சென்றார்கள் ஆகவே (அந்த கடனுக்கு நான் பொறுப்பாளியான காரணத்தினால்) என் தந்தையின் கடனிலிருந்து சிறிதளவு தள்ளுபடி செய்து (குறைத்து) விடும் படி
கடன்காரர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவர்கள் சிறிதளவும் தள்ளுபடி செய்ய மறுத்து விட்டார்கள். ஆகவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கடன்காரர்களிடம் எனக்காக பரிந்துரை செய்யும்படி கேட்டேன். நபியவர்கள் அவ்வாறு பரிந்துரை செய்தும் அவர்கள் சிறிதளவும் தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டனர். எனவே,நபி(ஸல்) அவர்கள் உங்கள் பேரீச்சங்கனிகளின் ஒவ்வொரு வகையையும் தனித்தனியாக பிரித்து வையுங்கள் .இத்க் இப்னு ஜைத் எனும் உயர்ரக பேரித்தம்பழங்களை ஒரு பக்கமும் லீன் எனும் தாழ்ந்த வகை பழத்தை ஒரு பக்கமும் அஜ்னா எனும் சிறப்பு ரகப் பேரித்தம்பழத்தை இன்னொரு பக்கமும் தனித்தனியாக பிரித்து வையுங்கள்.பிறகு கடன்காரர்களை வரவழையுங்கள், பின்னர் நான் உங்களிடம் வருகிறேன் என்று சொன்னார்கள்.நான் அவர்கள் கூறியபடியே செய்தேன்.பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்து பேரீச்சங்குவியலின் அருகே அமர்ந்து கொண்டு கடன்காரர் ஒவ்வொருவருக்கும் அளந்து கொடுக்கலானார்கள்.(இறுதியில்) நிறைவாக அனைவருக்கும் கொடுத்து முடித்தார்கள். பேரித்தம்பழக்குவியல் யாருடைய கரமும் படாததைப் போன்று முன்பு இருந்ததைப் போன்று (சற்றும்குறையாமல்) அப்படியே இருந்தது. (புஹாரி:2405)
இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: பரீரா(ரலி)வின் கணவர் அடிமையாக இருந்தார்,அவருக்கு முகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும்,.அவர் (தம் மனைவி பரீரா தன்னை பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது தமது) தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்று இருக்கிறது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஙீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும்,பரீரா முஙீஸின் மீது வைத்துள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள்.(முஙீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் (பரீராவிடம்) முஙீஸிடம் திரும்பி செல்லக்கூடாதா? என்று கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே எனக்கு தாங்கள் கட்டளை இடுகிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கிறேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்கு தேவையில்லை என்று கூறிவிட்டார். (புகாரி:5283)
பரீரா(ரலி) அவர்களும் ,ஜாபிர் (ரலி) அவர்களின் கடன்காரர்களும் நபி(ஸல்) அவர்கள் பரிந்துரை செய்தும் ஏற்கவில்லை. அதற்காக நபி(ஸல்) அவர்கள் வருத்தப்படவோ,சபிக்கவோ இல்லை,ஆகவே நம்முடைய சிபாரிசை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை என்பது தெரிகிறது.அதே சமயத்தில் நியாயமற்ற, தீமையான காரியங்களுக்காக யாரேனும் சிபாரிசு செய்தால் அதை கடுமையாக கண்டித்துள்ளார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: மக்ஸூமி குலத்தைச் சார்ந்த ஒரு பெண் திருடிவிட்டால் என்ற செய்தி குறைஷியருக்கு கவலை அளித்தது. அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காக) நபியிடம் பரிந்து பேச முடியும்? என்று சொன்னார்கள்.அவ்வாறே,உசாமா(ரலி)அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பரிந்து பேசினார்கள் .அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல் விட்டு விடுமாறு) பரிந்துரைக்கிறாய்? என்று கேட்டுவிட்டு பிறகு எழுந்துநின்று கூறினார்கள். மக்களே! உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூஇஸ்ராயீல்) மக்கள் அழிந்து போனதற்கு காரணமே அவர்களிடையே உள்ள உயர்குளத்தார் திருடிவிட்டால் அவர்களை தண்டிக்காமல் அவர்கள் விட்டுவிடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்கள் மீது தண்டனையை நிறைவேற்றுவார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக (இந்த) முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் ஃபாத்திமாவின் கையை துண்டித்து இருப்பேன் .(புஹாரி:6788)
எனவே,தன் தேவை முன்னிட்டு யாரேனும் சிபாரிசுக்கு அணுகினால் அதை செய்வதை விட்டும் எந்தவொரு முஸ்லிமும் விலகிக்கொள்ளக்கூடாது. பிடித்தவர்,பிடிக்காதவர்,பணக்காரர், ஏழை என்ற பாகுபாடெல்லாம் பார்க்கக்கூடாது. ஒரு நல்ல காரியத்திற்காக தகுதியுள்ளவர் பரிந்துரை செய்ய நாடினால் உடனே, நமது சக்திக்கேற்ப முயற்சி செய்ய வேண்டும்.
ஒருவருக்கொருவர் சண்டையிட்டு பிரிந்துகொண்ட தம்பதியினருக்கு மத்தியிலும், குடும்பங்களின் உறவுகளுக்கு மத்தியிலும் சமாதானத்தை ஏற்படுத்தும் பொருட்டு அதற்கு தகுந்த மத்தியஸ்தர்களை அணுகி சிபாரிசு செய்வதும், கல்வித்துறைகள், தொழிற்துறைகள் போன்றவற்றை ஏற்படுத்தி அதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக தக்க மனிதர்களிடம் சென்று சிபாரிசு செய்வது நன்மை தரக்கூடிய செயல்களாகும். இந்த பரிந்துரைக்கு அல்லாஹ்விடம் தகுந்த கூலி உண்டு.
ஆனால் ,அதே நேரத்தில் தீமையான காரியத்திற்கும், பொய்யாகவும் பரிந்துரைத்தால் அதற்கான குற்றமும் அவருக்கு உண்டு. இதையே அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகிறான்.
அதேபோல பரிந்துரைத்தல் என்பது நல்ல செயல் ஆகவே பரிந்துரையை உலக ஆதாயத்திற்காகச் செய்வதோ, அல்லது அதற்காக கூலி பெறுவதோ ஹராமாகும். நாம் தேர்தலின்போது நல்ல தலைவர்களை தேர்வுசெய்வது நம்முடைய பொறுப்பும், கடமையுமாகும். ஒரு தலைவரை பரிந்துரைப்பதற்காக கூலி பெறுவது ஹராமாகும். இது லஞ்சம் என்பதாக கவனிக்கப்படும். வாங்கிய பணத்திற்காக ஒரு தீயவனை தலைவனாக்க பரிந்துரைப்போமானால் அவன் செய்கிற அனைத்து அநியாயத்திலிருந்தும் நமக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை உணர்ந்து பரிந்துரைத்தல் என்ற அமானிதத்தை ஹலாலான முறையில் பயன்படுத்தி அல்லாஹ்வின் அன்பைப் பெறுவோமாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குசத்தியத்தை சொன்ன என் சகோதரற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... جزاءكم الله خيرا كثيرا
பதிலளிநீக்கு