இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நோன்பு யாரின் மீது கடமை?

படம்
நோன்பு யாரின் மீது கடமை?                எனதருமை இஸ்லாமிய நண்பர்களே! பாக்கியம் நிறைந்த ரமழான் மாதத்தின் 3 ஆம் நாள் தராவீஹில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம் நோன்பு யாரின் மீது கடமை என்பது பற்றிதான்.             நோன்பு என்றால் அல்லாஹ்விற்காக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும், இன்பம் சுகிப்பதை விட்டு நீங்கி இருப்பதுமாகும். மேலும் தேவையற்ற காரியங்களை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வதாகும்.                  அல்லாஹ்விற்கு மிகப் பிடித்தமான அமல் நோன்பு. நோன்புக்கு நானே கூலி என்று ரப்பு சொல்வதிலிருந்தே நாம் நோன்பின் அந்தஸ்தை விளங்க வேண்டும். இந்த நோன்பில் மட்டும்தான் முகஸ்துதியை பார்க்க முடியாது. மற்ற அமல்கள் கூட முகஸ்துதியை (பிறருக்காகவோ, அல்லது பிறரின் பாராட்டை பெறவோ, பிறருக்கு) காட்டவோ செய்யமுடியும். ஆனால் நோன்பு மட்டும் ஒரு அடியான் தன் ரப்புக்காக, அவனது அன்பை பெறுகின்ற நோக்கில் இருக்கும்.  அதனால்தான் இறைநேசர்களும் , நல்அடியார்களும் நோன்பு நோற்ற நிலையிலேயே தன...

இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

இஸ்லாம் என்றால் என்ன?                                                       மு ஸ்லிம் என்றால் யார்?                இஸ்லாம் எனும் அரபிச் சொல்லுக்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்று பொருள். அமைதி, சாந்தி எனவும் பொருள்படும்.                அனைத்தையும் படைத்து பக்குவப்படுத்தி, பரிபாலித்துவரும் ஏக இறைவனுக்கு முற்றிலும் கீழ்படிந்து அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுதல் மூலமே ஸலாம் எனும் சாந்தியையும், அமைதியையும் அடைய முடியும் என்பதையே இஸ்லாம் எனும் சொல் பிரதிபலிக்கிறது. தலைசிறந்த சிந்தனையாளர் டாக்டர். ஜோட்(Dr.Joad) கூறுகிறார்;                       ”பறவைகளைப் போன்று வானில் பறக்கவும், மீன்களைப் போன்று நீரில் நீந்தவும் நமக்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால், நிலத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மாத்திர...

அல்லாஹ்........

அல்லாஹ்....... எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! படைப்பதும் - துயர் துடைப்பதும் என் தொழில். நானே தொட்டில் நானே சவப்பெட்டி! ஏற்றமும்,இறக்கமும்  நானே! நீரும்,நெருப்பும் நானே! பிறப்பும், அழிவும் என்னில் என்பதனால்! எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! உரிமையளிப்பதும் நானே! மன்னிப்பளிப்பதும் நானே! என்னை இறைஞ்சினால் இறங்கிவருவேன் - என்னை மறந்து போனாலும் - நான் மறப்பதில்லை! மறுப்பதில்லை!! எனக்கு இங்கே நேர் - எதிர் மனிதன்!! கேள்வியும் நானே பதிலும் நானே ஆதியும் நானே அந்தமும் நானே என்பதனால்! எனக்கு நிகர் நானே! எனக்கு பிறப்புமில்லை! இறப்புமில்லை!! கமுதி மீராபட்டேல் ரஹ்மத் மாத இதழ், மே - 1994

அழகுயர் திருநோன்பு!

படம்
அழகுயர் திருநோன்பு! நோன்பு........ பூவிதழாய் நற்செயலை                                       பூமிதனில் துலங்கிடவே புகழ்மிக்க இறையோனை                                      போற்றி தினம் வணங்கிடவே; பொற்புடைய நல்வாழ்வு                                      புனிதமுடன் விளங்கிடவே பூந்தென்றல் எழிலுருவாய்                                      புவிசிறக்க வந்ததுவே! நோன்பு...... துன்பம் துயரகற்றி                                    தூக்கம் உணவகற்றி தொண்டின் தூய்மை நெறி   ...

பிழை பொறுப்பாய் ரஹ்மானே!

படம்
பிழை பொறுப்பாய் ரஹ்மானே! இறை தந்தான் மாதங்கள்                        எல்லாமே நல்லவைதான்! குறையில்லை என்றாலும்                      குறிப்புடனே ரமழானை நிறைவுடனே தனதென்றான்                      நிகரில்லா நன்மை சேர் மறை தந்தான் இந்நாளில்                     மகத்துவமோ மிகப்பெரிதே! எத்தனையோ இராப்பகல்கள்                    இயங்கிவரும் பூவுலகில் அத்தனையும் அல்லாஹ்வின்                   அருட்கொடையே என்றாலும் சித்தமதை நோன்பாலே                   சீர்படுத்தும் ரமழான்தான் அத்தனைக்கும் மகுடமென்றே                   ஆக்கிவைத்தான் அருளா...

வேண்டாம் பொய் சத்தியம்

படம்
வேண்டாம் பொய் சத்தியம் إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا     يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ                       இன்றைய கால கட்டத்தில் மனிதன் எத்தனையோ பல பிரச்சனைகளை, சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பொய்கள் பலவற்றைக்கூறி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைகிறான். எதையும் நிதானிப்பதற்கு முன் அவசரப்பட்டு அந்தப் பொய்யை உறுதிபடுத்தவும் செய்கிறான். அல்லாஹ் குர் ஆனில் ”மனிதன் அவசரக்காரனாகவே இருக்கிறான்” என்று கூறியது பொய்யாகுமா!                     சிலர் சத்தியம் என்பது எனக்கு சக்கரைப் பொங்கல் மாதிரி என அலட்சியமாகக் கூறுவர். ஆனால் தேவையின்றி சத்தியம் செய்வதையும், பொய்சத்தியம் செய்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆனால் சமுதாயம் எதையும் பொருட்பட...

பிரார்த்தனை செய்வோம்

படம்
பிரார்த்தனை செய்வோம்  எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழனைத்தும்,                                  கண்ணியமானவர்களே! உலகத்தார்க்கு அல்லாஹ் பல பொக்கிஷங்களை அருளியிருக்கிறான். அதிலே ஒன்றுதான் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது. ஏனெனில் அல்லாஹ் ஆரம்பமாக தாயின் கருவறையிலே ஒரு மலக்கை நியமித்து அந்த கரு ஆணா? பெண்ணா?, நல்லவனா? கெட்டவனா? அதன் உணவு, மறைவு அதன் பண்புகள் , அது பெறும் அந்தஸ்த்துகள் ஆகியவற்றை தக்தீராக அமைக்கச் செய்கிறான். என்று பெருமானார் (ஸல்) அவர்கள் வாயிலாக நமக்குத் தெரிகிறது. அப்படியிருக்க முடிவு செய்யப்பட்ட தக்தீரை மாற்ற உலகில் யாருக்கும் சக்தி இல்லை. இருப்பினும் நபி(ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் இப்படியும் சொல்வார்கள்,                            (முடிவு செய்யப்பட்ட தக்தீரை துஆவைத் தவிர வேறு எதனாலும் மாற்ற இயலாது)                          இந்த நபிமொழியின் கூற...

சரித்திர புகழ் பெற்ற எட்டுத் தூண்கள்

படம்
மதீனா பள்ளிவாசலிலுள்ள சரித்திரப் புகழ் பெற்ற  எட்டுத் தூண்கள்                            அன்பானவர்களே! நமது உயிரினும் மேலான நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா நுழைந்த போது முதன் முதலில் மஸ்ஜிதுன் நபவியை கட்டினார்கள். அந்த பள்ளியும், அதை சார்ந்த இடங்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.             முல்லா அலீ காரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ”மதீனாப் பள்ளியிலுள்ள சிறப்பு தாங்கிய தூண்களையும், மற்றும் புனித ஸ்தலங்களையும் தரிசித்து அங்கு நபில் தொழுகைகளையும் தொழுக வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்தப் பகுதி மஸ்ஜிதாக விளங்கியதோ அது மிக முக்கியமான பகுதி. அதில் இடம்பெற்றுள்ள தூண்களும் புனிதம் பெற்றவை. புகாரி ஷரீஃபிலுள்ள ஹதீஸின் படி எட்டுத் தூண்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், புனிதம் பெற்றவையுமாகும். அவற்றுக்கு அருகில் நின்று கண்ணியமிக்க சஹாபாக்கள் தொழுவது வழக்கம்.”             அரபியில் தூண்களுக்கு உஸ்துவா...

தராவீஹ்..! வேலூர் அல்-பக்கியாத்துஸ் ஸலிஹாத் தீர்ப்பு!

படம்
தராவீஹ்..! வேலூர் அல்- பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் தீர்ப்பு!            அன்பிற்குரிய இஸ்லாமிய சொந்தங்களே! வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவிற்கு விளக்கம் வேண்டி ஒருவர் ஃபத்வா கேட்கிறார். கேள்வி:        “சிலர் தராவீஹ் தொழுகை 8 ரக் அத்கள்தான் எனக்கூறி அதற்கு புகாரி ஷரீஃபை ஆதாரம் காட்டுகின்றனர். அத்துடன் 20 ரக்அத்துகள் என்பதை கடுமையாக எதிர்த்து இருபது ரக்அத் தொழுவோருக்கு மாற்றம் செய்து குழப்பம் செய்கின்றனர்.”         இதைப்பற்றி மார்க்க அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்?            ”தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்களா? அல்லது இருபது ரக்அத்களா? இவ்விரண்டில் எது சரியானது என்பது பற்றி உறுதியான முறையில் பதில் தருமாறு வேண்டுகிறேன்.” பதில்:          ”சரியான (பதில் கொடுப்ப)தற்கு தவ்ஃபீக் செய்பவன் அல்லாஹ்வே!”           புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபுதாவூத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் தராவீஹ் தொழுகை (ரக் அத்)களின் எண்ணிக்கை ப...

இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா (ரஹ்)

படம்
இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா (ரஹ்)                     அன்பான இஸ்லாமிய சொந்தங்களே!  நம் முன்னோர்களாகிய இமாம்கள் அல்லாஹ்வின் உதவியாலும், தங்கள் அயராத ஆராய்ச்சியாலும், தங்கள்  வாழ்நாட்களில் பெரும்பகுதியை செலவழித்து  குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆராய்ந்து பல்வேறு மார்க்க சட்டங்களை தொகுத்துத் தந்து மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் குர்ஆன், ஹதீஸின் வழியில் தீர்வுகளை எந்த பிசகுதலும் இல்லாமல் இந்த உம்மத்திற்கு சமர்பித்துச் சென்றுள்ளார்கள். உலகில் பெரும்பாலான முஸ்லிம்கள் இவர்கள் காட்டித்தந்த வழியிலேயே சென்று குர்ஆனையும், சுன்னாவையும் மிக நேர்த்தியாக பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.                            அந்த உயர்வான நான்கு இமாம்களில் கெளரவமிக்க தலைவரான இமாமுல் அஃளம் அவர்களைப் பற்றி ஒருசில தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம். பிறப்பு & பெயர்:             இராக் நாட்டின் மிகப் பிரபல்யமான நகரமாகிய கூஃபா நகரில் ஹிஜ்ரி 80...