இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

இஸ்லாம் என்றால் என்ன?  

                                                    முஸ்லிம் என்றால் யார்?


               இஸ்லாம் எனும் அரபிச் சொல்லுக்குக் கீழ்ப்படிதல், கட்டளைகளை நிறைவேற்றுதல் என்று பொருள். அமைதி, சாந்தி எனவும் பொருள்படும்.

               அனைத்தையும் படைத்து பக்குவப்படுத்தி, பரிபாலித்துவரும் ஏக இறைவனுக்கு முற்றிலும் கீழ்படிந்து அவனுடைய கட்டளைகளை நிறைவேற்றுதல் மூலமே ஸலாம் எனும் சாந்தியையும், அமைதியையும் அடைய முடியும் என்பதையே இஸ்லாம் எனும் சொல் பிரதிபலிக்கிறது.

தலைசிறந்த சிந்தனையாளர் டாக்டர். ஜோட்(Dr.Joad) கூறுகிறார்;


                      ”பறவைகளைப் போன்று வானில் பறக்கவும், மீன்களைப் போன்று நீரில் நீந்தவும் நமக்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால், நிலத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை மாத்திரம் இன்னும் நாம் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் மனிதன் எவ்வாறு நிலத்தில் வாழ வேண்டும் என்கிற வழிமுறைக்குப் பெயர்தான் இஸ்லாம்”.

Islam is nothing but a perfect way of life


              சிறுநீர் கழிப்பது முதல் சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வது வரை, கர்ப்ப அறையிலிருந்து வெளிவந்தது முதல் மண்ணறை செல்வது வரை,காலையில் கண்விழித்தது முதல் இரவில் உறங்கச் செல்வது வரை உள்ள மனிதனின் அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கு இஸ்லாம். 

               இஸ்லாம் வழங்கும் வழிமுறையை தன்னகத்தே கொண்டவனுக்குப் பெயர் முஸ்லிம் என அழைக்கப்படுகிறது.





தொகுப்பு
 மெளலவி. M  . நூர் முஹம்மது பத்ரிய்யி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

ரெகமெண்டேஷன் (பரிந்துரைத்தல்)

நோன்பு யாரின் மீது கடமை?