குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)
குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)
அன்பிற்குரியவர்களே! இஸ்லாத்தில் இரண்டே இரண்டு ஈதுப் பெருநாட்கள் மட்டுமே உள்ளன. அவ்விரண்டில் ஒன்று நோன்புப் பெருநாள் மற்றொன்று ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். இவ்விரு பெருநாட்களிலும் தனித்தனியான இபாதத்துகள் (வணக்கங்கள்) உண்டு. அதனடிப்படையில் நம்மை எதிர்நோக்கி வருகிற ஹஜ்ஜுப் பெருநாளில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான இபாதத்துதான் குர்பானி ஆகும்.
உழ்ஹிய்யா (குர்பானி) என்றால் என்ன?
இஸ்லாமிய மார்க்கத்தில் உழ்ஹிய்யா என்பது குறிப்பிட்ட நாளில் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய உயிரினங்களிலிருந்து அறுக்கப்படும் பிராணிக்கு உழ்ஹிய்யா எனக்கூறப்படும். அந்த நாளை ஈதுல் அழ்ஹா என்றழைக்கப்படும்.
குர்பானியின் சட்டம் என்ன?
குர்பானி கொடுப்பது ஹனஃபி மத்ஹபின் படி வாஜிபாகும். (கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்)
குர்பானி கடமை ஆகுவதற்கு உரிய நிபந்தனைகள் என்ன?
1. குர்பானி கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும். முஸ்லிமல்லாதோரின் மீது குர்பானி கடமை இல்லை.
2. குர்பானி கொடுப்பவர் உள்ளூர்வாசியாக இருக்க வேண்டும்.
அதாவது வியாபார நிமித்தமாகவோ, அல்லது ஏதேனும் தேவைக்காகவோ 77 கி.மீ (48 மைல்)அல்லது அதைவிட அதிகமான தூரத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தால் அவர்களின் மீது குர்பானி கடமை இல்லை.
(அப்படி பயணம் செய்தவர்கள் துல்ஹஜ் மாதம் பிறை 10, 11, 12 ஆகிய நாட்களில் தன் சொந்த ஊருக்கு திரும்பி வந்துவிட்டாலோ அல்லது தான் பயணம் செய்த ஊரில் 15 நாட்கள் அல்லது அதற்கும் மேலாக தங்குவதாக முடிவு செய்தாலோ அப்போது அவர்களின் மீது குர்பானி கடமையாகும்.)
3. குர்பானி கொடுப்பதற்குரிய பொருளாதார சக்தி பெற்றவராக இருக்க வேண்டும்.
அதனடிப்படையில் துல்ஹஜ் மாதம் பிறை 10, 11, 12 ஆகிய தினங்களில் தன் வாழ்க்கைக்குரிய அத்தியாவசிய தேவைகள் போக 10-1/2 பவுன் (87-1/2 கிராம்) தங்கம் அல்லது 612-1/2 கிராம் வெள்ளி அல்லது அதன் மதிப்புள்ள தொகை பணமாகவோ, வியாபாரப் பொருளாகவோ, அல்லது வங்கியில் வைத்திருந்தாலோ அவர்மீது கடமையாகும்.
தற்போது மதிப்பின் படி தன் தேவைபோக மிச்சமாக 1,75,000 /- ரூபாய்க்கு உரிமையாளராக இருந்தால் அவர்மீது குர்பானி கடமையாகும்.
குர்பானியின் நேரம் என்ன?
துல்ஹஜ் பிறை 10 ஸுபுஹு உதித்தது முதல் துல்ஹஜ் பிறை 12 சூரியன் மறையும் வரை குர்பானி அமலை நிறைவேற்றலாம்.
என்றாலும், கிராமவாசிகள் ஈதுடைய நாளில் சூரியன் உதயமான பின்னரும், நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் பெருநாள் தொழுகைக்குப் பின்னரும் குர்பானி கொடுப்பது கடமையாகும். நூல்:ஆலம் கீரி பக்கம் 327
நகரவாசிகள் ஈதுத் தொழுகை நடைபெறும் முன்பு குர்பானி கொடுத்தாலும், நடந்து கொண்டிருக்கும்போது குர்பானி கொடுத்தாலும் குர்பானி நிறைவேறாது. அவ்வாறு கொடுத்தால் அதற்கு பகரமாக வேறொரு குர்பானி கொடுக்க வேண்டும். நூல்:ஆலம் கீரி பக்கம் 327
பிறை பத்து அன்று ஏதாவது காரணத்தினால் ஈதுத் தொழுகை நடைபெறவில்லையென்றால் சூரியன் உச்சிப் பொழுதை தாண்டும் வரை குர்பானி கொடுக்கக் கூடாது.சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்துவிட்டால் குர்பானி கொடுக்கலாம். மறுநாள் பிறை 11அன்று ஈதுத்தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுப்பது கூடும். நூல்:ஆலம் கீரி பக்கம் 328
குர்பானி கொடுக்கப் படக்கூடிய நாட்களில் இரவு நேரங்களில் குர்பானி கொடுப்பது மக்ரூஹ். நூல்:ஆலம் கீரி பக்கம் 328
எந்தெந்த பிராணிகளை குர்பானி கொடுக்கலாம்?
வெள்ளாடு, செம்மறி ஆடு, மாடு(பசு, காளை, எருமை), ஒட்டகம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.
குர்பானி பிராணியில் கவனிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள்
1. குர்பானி பிராணி மார்க்கம் நிர்ணயித்துள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்.
(ஒட்டகமாக இருப்பின் அது ஐந்து வயது நிரம்பியதாகவும், மாடாக இருப்பின் அது இரண்டு வயது நிரம்பியதாகவும், ஆடாக இருப்பின் அது ஒரு வயது நிரம்பியதாகவும் இருக்க வேண்டும். எனினும் செம்மறி ஆடு 6 மாதத்திலேயே ஒருவருட வெள்ளாட்டைப் போல இருந்தால் அந்த செம்மறி ஆட்டையும் குர்பானி கொடுக்கலாம்.)
ஆடு ஒரு நபருக்காகவும், மாடு,ஒட்டகம் ஏழு நபருக்கோ, அல்லது அதைவிட குறைந்தவர்களுக்காகவோ கொடுக்கலாம்.ஆனால், ஏழு நபர்களும் இறை பொருத்தத்தை ஆதரவு வைக்க வேண்டும். யாரேனும் ஒருவர் இறைச்சியை நோக்கமாக வைத்தாலும் அனைவரின் குர்பானியும் கூடாமல் போய்விடும்.
2. ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
அதன்படி குர்பானிப் பிராணிகள் தெளிவான குருடாகவோ, தெளிவான நொண்டியாகவோ, தெளிவான நோயுற்றதாகவோ,நன்கு மெலிந்தவையாகவோ இருக்கக் கூடாது.
அதேபோல கண் குருடானவைகளை, ஒற்றைக்கண் பார்வை உள்ளவைகளை, மூன்றில் ஒரு பாகம் அல்லது அதைவிட கூடுதலாக பார்வை அற்றவைகளை குர்பானி கொடுப்பது கூடாது.
அதேபோல, மூன்றில் ஒருபாகம் அல்லது அதைவிட அதிகமாக காது அறுபட்டவைகளை குர்பானி கொடுப்பது கூடாது. பிறப்பிலேயே இரு காதுகள் இல்லாதவைகளையும், ஒரு காது இல்லாதவைகளையும் குர்பானி கொடுப்பது கூடாது.
கொம்பை அடியோடு பிடுங்கப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுப்பது கூடாது. ஆனால், பிறப்பிலேயே கொம்பு இல்லாதவைகளையும், பல் அறவே இல்லாதவை ஆனால் மேயக்கூடியவைகளையும் குர்பானி கொடுக்கலாம்.
வால் வெட்டப்பட்டவை, பித்தட்டு துண்டிக்கப்பட்டவை, மூக்கு துண்டிக்கப்பட்டவை, மடி துண்டிக்கப்பட்டவை, மேயத்தெரியாதவை, கன்றுக்கு பால் கொடுக்க முடியாதவை, பால் வற்றியவை, நாக்கு இல்லாதவை, நஜீஸைத்தவிர மற்றதை சாப்பிடாதவை ஆகியவற்றை குர்பானி கொடுப்பது கூடாது.

விதை அடிக்கப்பட்ட பிராணிகளை குர்பானி கொடுப்பது கூடும் என்பது மட்டுமல்ல அது சிறந்ததுமாகும்.
1. குர்பானி கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தால் தனது கையால் அறுப்பது சிறந்தது.அறுக்கத்தெரியாதவர்கள் பிறரின் உதவியை நாடலாம். அப்படி பிறர் அறுக்கும்போது நாம் அவ்விடத்தில் நிற்பது சிறந்தது.
பிராணிகளை அறுக்கும் முறை
1. குர்பானி கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தால் தனது கையால் அறுப்பது சிறந்தது.அறுக்கத்தெரியாதவர்கள் பிறரின் உதவியை நாடலாம். அப்படி பிறர் அறுக்கும்போது நாம் அவ்விடத்தில் நிற்பது சிறந்தது.
2. அறுக்கும் முறை தெரிந்திருந்தால் பெண்களும் அறுக்கலாம்.
3. கூட்டுக் குர்பானியில் ஒருவர் அறுக்க மற்றவர்கள் அருகில் இருப்பது சிறந்தது.
4. கத்தியை கூர்மயாக்கிக் கொள்ள வேண்டும்.
5. குர்பானி பிராணியின் முகத்தை கிப்லாவின் பக்கம் திருப்பி வைக்க வேண்டும்.
6. கத்தியை கழுத்தில் அழுத்தி ஒரே அறுப்பில் நான்கு நரம்புகள் அறுபடுமளவிற்கு அறுத்து முடிக்க வேண்டும்.
7. அறுக்கும் முன் துஆ ஓதிக்கொள்ள வேண்டும்.
8. அறுத்த பிறகு இரத்தம் முழுமையாக வெளியான பிறகு சுத்தம் செய்ய வேண்டும்.
9. ஒரு பிராணியை அறுக்கும்போது மற்றொரு பிராணியை பார்க்க விடக்கூடாது.
இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனீஃபவ் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்னஸ் ஸலாத்தி வ நுஸ்கீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீக லஹு வபி தாலிக உமிர்த்து வ அன அவ்வலுல் முஸ்லிமீன்.

குர்பானி பிராணியை அறுக்கும் முன் ஓதும் துஆ
إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا ۖ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
لَا شَرِيكَ لَهُ ۖ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனீஃபவ் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்னஸ் ஸலாத்தி வ நுஸ்கீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீக லஹு வபி தாலிக உமிர்த்து வ அன அவ்வலுல் முஸ்லிமீன்.
பிராணியை அறுக்கும்போது ஓதும் துஆ
اَللَّهُمَّ هَذَا لَكَ وَ مِنْكَ بِسْمِ اللهِ اَللهُ اَكْبَرُ
அல்லாஹும்ம ஹாதா லக வ மின்க பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்
குர்பானி கொடுத்த பிறகு ஓதும் துஆ
اَللَّهُمَّ تَقَبَّلْ مِنِّي كَمَا تَقَبَّلْتَ مِنْ خَلِيْلِكَ سَيِّدِنَا اِبْرَاهِيْمَ عَلَيْهِ السَّلَامُ وَ مِنْ حَبِيْبِكَ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّي اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
அல்லாஹும்ம தகப்பல் மின்னீ கமா தகப்பல்த்த மின் ஹலீலிக்க சய்யிதினா இப்ராஹீம அலைஹிஸ் ஸலாமு வ மின் ஹபீபிக சய்யிதினா முஹம்மதின் சல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்.
குறிப்பு: நமக்காக குர்பானி கொடுத்தால் இந்த துஆவை அப்படியே ஓதலாம். நாம் பிறருக்காக குர்பானி கொடுத்தால் அல்லாஹும்ம தகப்பல் மின்னீ என்று ஓதாமல் அல்லாஹும்ம தகப்பல் மின் என ஓதி யாருக்காக குர்பானி கொடுக்கிறோமோ அவரின் பெயரை சொல்ல வேண்டும். பிறகு அப்படியே மிச்ச துஆவை ஓதவேண்டும்.
உதாரணமாக,
அல்லாஹும்ம தகப்பல் மின் _____(பெயர்)______ கமா தகப்பல்த்த..................
பொதுவாக அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை குர்பானி கொடுப்பவர் மூன்று பாகங்களாகப் பிரித்து ஒரு பகுதியை தர்மம் செய்வதற்கும், மற்றொரு பகுதியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காகவும், மூன்றாவது பகுதியை தனக்காகவும்(தன் குடும்பத்திற்காக) வைத்துக் கொள்வது நல்லது.
குர்பானி பிராணியின் அனைத்து இறைச்சியையும் தர்மம் செய்துவிட்டால் அது மிகச் சிறந்ததாகும்.
குர்பானி பிராணியின் இறைச்சி முழுவதும் தன் குடும்பத்தார்க்கே போதுமானதாக இருந்தால் தானே வைத்துக் கொள்வதும் கூடும்.
நேர்ச்சை செய்யப்பட்ட குர்பானியாக இருந்தால் அதிலிருந்து கொஞ்சம் கூட சாப்பிடாமல் அனைத்தையும் ஸதகா செய்துவிட வேண்டும்.
ஏழை, பணக்காரன், முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் கொடுக்கலாம்.
பொதுவாக அறுக்கப்படும் பிராணிகளில் 7 உறுப்புகளை சாப்பிடக் கூடாது.
1. இரத்தம் 2. பித்தப்பை 3. நீர்ப்பை 4. இரு விதைகள் 5.களலை(கட்டி) 6. ஆண்குறி 7. பெண்குறி.
குர்பானி பிராணியின் தோலை அறுத்தவருக்கு கூலியாகவோ, அல்லது குறைவான கூலியை ஈடு செய்யவோ கொடுக்கக் கூடாது.
தோலை குர்பானி கொடுத்தவர் பதனிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
தோலை விற்கக்கூடாது. அப்படி விற்றால் அந்தப் பணத்தை தர்மம் செய்துவிட வேண்டும்.
தோலை பள்ளிவாசலின் செலவினங்களுக்காக பயன்படுத்தக்கூடாது. ஆனால், பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் பைத்துல்மால் இருந்து அதன்மூலம் ஏழைகளுக்கு உதவி செய்யப்பட்டால் அந்த பைத்துல்மாலில் சேர்த்து ஏழைகளுக்கு உதவலாம்.
அதேபோல மதரஸாக்களின் கட்டிடத்திற்காக பயன்படுத்தக் கூடாது. ஆனால் மதரஸாவில் பயிலும் மானவ/ மாணவியருக்காக பயன்படுத்தலாம்.
குர்பானி இறைச்சியை பங்கீடு செய்தல்

பிராணிகளில் சாப்பிடக் கூடாத உறுப்புகள்
பொதுவாக அறுக்கப்படும் பிராணிகளில் 7 உறுப்புகளை சாப்பிடக் கூடாது.
1. இரத்தம் 2. பித்தப்பை 3. நீர்ப்பை 4. இரு விதைகள் 5.களலை(கட்டி) 6. ஆண்குறி 7. பெண்குறி.
குர்பானி பிராணியின் தோலின் சட்டம்
குர்பானி பிராணியின் தோலை அறுத்தவருக்கு கூலியாகவோ, அல்லது குறைவான கூலியை ஈடு செய்யவோ கொடுக்கக் கூடாது.
தோலை குர்பானி கொடுத்தவர் பதனிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
தோலை விற்கக்கூடாது. அப்படி விற்றால் அந்தப் பணத்தை தர்மம் செய்துவிட வேண்டும்.
தோலை பள்ளிவாசலின் செலவினங்களுக்காக பயன்படுத்தக்கூடாது. ஆனால், பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் பைத்துல்மால் இருந்து அதன்மூலம் ஏழைகளுக்கு உதவி செய்யப்பட்டால் அந்த பைத்துல்மாலில் சேர்த்து ஏழைகளுக்கு உதவலாம்.
அதேபோல மதரஸாக்களின் கட்டிடத்திற்காக பயன்படுத்தக் கூடாது. ஆனால் மதரஸாவில் பயிலும் மானவ/ மாணவியருக்காக பயன்படுத்தலாம்.
குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை:
குர்பானி கொடுப்பவர் துல்ஹஜ் பிறை 1 லிருந்து குர்பானி கொடுக்கும் வரை தன் முடி , நகம் ஆகியவற்றை களையக்கூடாது.ஆகவே முன்கூட்டியே களைந்து சுத்தமாக இருப்பது நல்லது.
குர்பானி அமலை நிறைவேற்றிய பின் அவ்விடத்தில் நாற்றம் அடிக்காத அளவிற்கு கிருமிநாசினிகளை பயன்படுத்தி நன்கு சுத்தப்படுத்த வேண்டும். நம்மால் நம் அண்டை வீட்டார்களும், மாற்றுமத நண்பர்களும் முகம் சுழிக்காத அளவிற்கு நம் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.
குர்பானியின் எந்த செயல்பாடுகளையும் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்கவும்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பானி போதுமா?
போதாது, ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தனித்தனியாக குர்பானி கொடுக்க தகுதி பெற்றிருந்தால் ஒவ்வொருக்காகவும் குர்பானி கொடுக்க வேண்டும்.
குர்பானி சம்பந்தமான மேலும் சில சட்டங்கள்.
குர்பானிக்குரிய பிராணி காணாமலோ அல்லது திருட்டு போய்விட்டாலோ அதற்குப் பகரமாக வேறொரு பிராணி வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும்.
அப்படி வேறொன்று வாங்கியபின் காணாமல் போன அல்லது திருட்டுப் போன பிராணி கிடைத்துவிட்டால் அவர் செல்வந்தராக இருப்பின் அவர் ஒரு பிராணியை மட்டும் அறுத்தால் போதுமானது. ஏழையாக இருந்தால் அவர் இரண்டையும் குர்பானி கொடுக்க வேண்டும். (ஷரஹ் பிதாயா)
குர்பானி கொடுக்க நாடிய பின்னர் அந்த பிராணியில் பால் கறப்பது மக்ரூஹ் ஆகும். அப்படி கறந்துவிட்டால் தர்மம் செய்துவிட வேண்டும்.
குர்பானி பிராணி குட்டி போட்டால் அதை அப்படியே அல்லது அறுத்து தர்மம் செய்துவிட வேண்டும்.விற்றுவிட்டால் விலையை தானம் செய்துவிட வேண்டும்.
குர்பானி கொடுக்க வசதியற்றவர்கள் குர்பானி கொடுப்பதாக எண்ணிக்கொண்டு கோழி, சேவலை அறுப்பது மக்ரூஹ். ஆலம்கீரி, குலாஸா பக்கம்- 332
வசதியற்றவர் குர்பானி கொடுக்கும் நிய்யத்தில் பிராணியை விலைக்கு வாங்கிவிட்டால் அவர்மீது குர்பானி வாஜிபாகும். ஆலம்கீரி- 323
குர்பானி வாஜிபானவன் மூன்றுநாட்களும் குர்பானி கொடுக்கவில்லையானால் குர்பானி பிராணியை அறுக்காமலே தர்மம் செய்துவிட வேண்டும். அறுத்தல் என்பது குறிப்பிட்ட தினங்களில் தான் வணக்கமாக கருதப்பட்டுள்ளது. எனவே அறுக்காமல் தர்மம் செய்துவிட வேண்டும்.
அப்படி அறுத்துவிட்டால் அந்த இறைச்சி முழுவதையும் தர்மம் செய்துவிட வேண்டும். அவற்றில் கொஞ்சத்தை சாப்பிட்டுவிட்டால் சாப்பிட்ட அளவிற்குள்ள கிரயத்தை தர்மம் செய்துவிட வேண்டும்.ஆலம்கீரி-329
குர்பானிக்காக வாங்கப்பட்ட பிராணி இறந்துவிட்டால் வசதியுள்ளவன் வேறு பிராணி வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும். வசதியற்றவனாக இருந்தால் தேவையில்லை. ரத்துல் முக்தார் பக்கம் - 384
குறையற்றதாக வாங்கி அறுக்கச் செல்லும் முன் குறை ஏற்பட்டுவிட்டால் குர்பானி வாஜிப் ஆகாதவர் அதனையே கொடுக்கலாம். ஆனால் குர்பானி வாஜிபானவர் வேறொரு பிராணியை வாங்கி குர்பானி கொடுக்க வேண்டும். (ஷரஹ் தன்வீர்)
அல்லாஹ் நாம் நிறைவேற்றுகின்ற நல் அமல்களைக் கொண்டு நம் பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை வாஜிபாக்குவானாக! ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
தொகுப்பு
மெளலவி. M. நூர் முஹம்மது பத்ரிய்யி,
ஜவாஹிருல் பத்ரிய்யா
கறம்பக்குடி

கருத்துகள்
கருத்துரையிடுக