இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா (ரஹ்)
இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா (ரஹ்) அன்பான இஸ்லாமிய சொந்தங்களே! நம் முன்னோர்களாகிய இமாம்கள் அல்லாஹ்வின் உதவியாலும், தங்கள் அயராத ஆராய்ச்சியாலும், தங்கள் வாழ்நாட்களில் பெரும்பகுதியை செலவழித்து குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆராய்ந்து பல்வேறு மார்க்க சட்டங்களை தொகுத்துத் தந்து மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் குர்ஆன், ஹதீஸின் வழியில் தீர்வுகளை எந்த பிசகுதலும் இல்லாமல் இந்த உம்மத்திற்கு சமர்பித்துச் சென்றுள்ளார்கள். உலகில் பெரும்பாலான முஸ்லிம்கள் இவர்கள் காட்டித்தந்த வழியிலேயே சென்று குர்ஆனையும், சுன்னாவையும் மிக நேர்த்தியாக பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த உயர்வான நான்கு இமாம்களில் கெளரவமிக்க தலைவரான இமாமுல் அஃளம் அவர்களைப் பற்றி ஒருசில தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம். பிறப்பு & பெயர்: இராக் நாட்டின் மிகப் பிரபல்யமான நகரமாகிய கூஃபா நகரில் ஹிஜ்ரி 80...