About Me

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

                      அன்பானவர்களே!

 என் பெயர் - மௌலவி.M.நூர்முஹம்மது பத்ரிய்யி, B.A.

பிறப்பு: 5/7/1989

               நான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பல வருடங்களாக உலகின் பல்வேறு இடங்களுக்கு திறமையான ஆலிம்களை உருவாக்கித் தந்துகொண்டிருக்கின்ற அல்பத்ரிய்யா அரபிக் கல்லூரியில் 2013 ஆம் ஆண்டு ஸனது பெற்று அதே கறம்பை நகரில் பயிலும் போதே 2011 முதல் இமாமத் செய்யும் பாக்கியம் பெற்றேன்.  தற்போது கறம்பக்குடி ஜாமிஆ மஸ்ஜிதுன்னுடைய இமாமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

                   கறம்பை நகரில் 7 பள்ளிவாசல்கள் ஒரே தலைமையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த பள்ளிவாசல்களில் பணிபுரியும் உலமாக்களோடு இணைந்து நண்பர்களாக, சகோதரர்களாக சேவை செய்து வருகிறோம்.

                     எங்கள் சேவையின் ஒரு பகுதியாக இந்த தளத்தை உருவாக்கி  இருக்கின்றோம், இதன் மூலம் உலகெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் பலனடைய வேண்டும். இதுவே எமது நோக்கம்.

                      எங்களின் சேவையை அல்லாஹ் கபூல் செய்வானாக! மேலும் எங்கள் பெற்றோர்களுக்கும், எங்களை வார்த்தெடுத்த எங்களின் ஆசிரியப் பெருமக்களுக்கும், எங்கள் கல்விக்காக உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலகிலும் நிம்மதியான வாழ்வை தந்தருள்வானாக! ஆமீன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குர்பானியின் சட்டங்கள் (ஹனஃபி)

ரெகமெண்டேஷன் (பரிந்துரைத்தல்)

நோன்பு யாரின் மீது கடமை?