வேண்டாம் பொய் சத்தியம்
வேண்டாம் பொய் சத்தியம் إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ இன்றைய கால கட்டத்தில் மனிதன் எத்தனையோ பல பிரச்சனைகளை, சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். ஆனால் சில சந்தர்ப்பங்களில் பொய்கள் பலவற்றைக்கூறி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனைகிறான். எதையும் நிதானிப்பதற்கு முன் அவசரப்பட்டு அந்தப் பொய்யை உறுதிபடுத்தவும் செய்கிறான். அல்லாஹ் குர் ஆனில் ”மனிதன் அவசரக்காரனாகவே இருக்கிறான்” என்று கூறியது பொய்யாகுமா! சிலர் சத்தியம் என்பது எனக்கு சக்கரைப் பொங்கல் மாதிரி என அலட்சியமாகக் கூறுவர். ஆனால் தேவையின்றி சத்தியம் செய்வதையும், பொய்சத்தியம் செய்வதையும் இஸ்லாம் தடுக்கிறது. ஆனால் சமுதாயம் எதையும் பொருட்பட...