அல்லாஹ்........
அல்லாஹ்.......
எனக்கு நிகர் நானே!
எனக்கு பிறப்புமில்லை!
இறப்புமில்லை!!
படைப்பதும் - துயர்
துடைப்பதும்
என் தொழில்.
நானே தொட்டில்
நானே சவப்பெட்டி!
ஏற்றமும்,இறக்கமும்
நானே!
நீரும்,நெருப்பும்
நானே!
பிறப்பும், அழிவும்
என்னில் என்பதனால்!
எனக்கு நிகர் நானே!
எனக்கு பிறப்புமில்லை!
இறப்புமில்லை!!
உரிமையளிப்பதும் நானே!
மன்னிப்பளிப்பதும் நானே!
என்னை இறைஞ்சினால்
இறங்கிவருவேன் - என்னை
மறந்து போனாலும் - நான்
மறப்பதில்லை! மறுப்பதில்லை!!
எனக்கு இங்கே
நேர் - எதிர் மனிதன்!!
கேள்வியும் நானே
பதிலும் நானே
ஆதியும் நானே அந்தமும்
நானே என்பதனால்!
எனக்கு நிகர் நானே!
எனக்கு பிறப்புமில்லை!
இறப்புமில்லை!!
கமுதி மீராபட்டேல்
ரஹ்மத் மாத இதழ், மே - 1994
கருத்துகள்
கருத்துரையிடுக