நல்லோர்களும் ,நாமும் ஒன்றா?
நல்லோர்களும், நாமும் ஒன்றா? قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا (السورة ورقم الآية: الكهف (110). மனித சமூகத்தை பல கோத்திரங்களாக, பல பிரிவுகளாக, நிறத்தால், அமைப்பால், பொருளாதாரத்தால், மொழியால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளோடு அல்லாஹ் படைத்திருந்த போதும் மனிதர்கள் அனைவர்களின் மீதும் தன் கருணையை, அன்பை உலகில் சமமாகவே அருளுகிறான். எனினும் யார் தன்னுடைய கட்டளைகளை உலகில் செவி தாழ்த்தி, அடிபணிந்து,உலகப்பற்றற்று வாழ்கிறார்களோ அவர்களின் மீது தனிப்பெரும் அன்பை பொழிகிறான். அப்படி அல்லாஹ்வால் தனிப்பெரும் அன்பு போற்றப்பட்ட நபிமார்கள் இன்றளவிலும் நம்மோடு வாழுகிற எத்தனையோ நல்அடியார்கள் அல்லாஹ்வின் பேரன்பில் இருக்கிறார்கள். ...