இடுகைகள்

பிரார்த்தனை செய்வோம்

படம்
பிரார்த்தனை செய்வோம்  எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழனைத்தும்,                                  கண்ணியமானவர்களே! உலகத்தார்க்கு அல்லாஹ் பல பொக்கிஷங்களை அருளியிருக்கிறான். அதிலே ஒன்றுதான் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது. ஏனெனில் அல்லாஹ் ஆரம்பமாக தாயின் கருவறையிலே ஒரு மலக்கை நியமித்து அந்த கரு ஆணா? பெண்ணா?, நல்லவனா? கெட்டவனா? அதன் உணவு, மறைவு அதன் பண்புகள் , அது பெறும் அந்தஸ்த்துகள் ஆகியவற்றை தக்தீராக அமைக்கச் செய்கிறான். என்று பெருமானார் (ஸல்) அவர்கள் வாயிலாக நமக்குத் தெரிகிறது. அப்படியிருக்க முடிவு செய்யப்பட்ட தக்தீரை மாற்ற உலகில் யாருக்கும் சக்தி இல்லை. இருப்பினும் நபி(ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் இப்படியும் சொல்வார்கள்,                            (முடிவு செய்யப்பட்ட தக்தீரை துஆவைத் தவிர வேறு எதனாலும் மாற்ற இயலாது)                          இந்த நபிமொழியின் கூற...

சரித்திர புகழ் பெற்ற எட்டுத் தூண்கள்

படம்
மதீனா பள்ளிவாசலிலுள்ள சரித்திரப் புகழ் பெற்ற  எட்டுத் தூண்கள்                            அன்பானவர்களே! நமது உயிரினும் மேலான நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனா நுழைந்த போது முதன் முதலில் மஸ்ஜிதுன் நபவியை கட்டினார்கள். அந்த பள்ளியும், அதை சார்ந்த இடங்களும் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை.             முல்லா அலீ காரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ”மதீனாப் பள்ளியிலுள்ள சிறப்பு தாங்கிய தூண்களையும், மற்றும் புனித ஸ்தலங்களையும் தரிசித்து அங்கு நபில் தொழுகைகளையும் தொழுக வேண்டும். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்தப் பகுதி மஸ்ஜிதாக விளங்கியதோ அது மிக முக்கியமான பகுதி. அதில் இடம்பெற்றுள்ள தூண்களும் புனிதம் பெற்றவை. புகாரி ஷரீஃபிலுள்ள ஹதீஸின் படி எட்டுத் தூண்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், புனிதம் பெற்றவையுமாகும். அவற்றுக்கு அருகில் நின்று கண்ணியமிக்க சஹாபாக்கள் தொழுவது வழக்கம்.”             அரபியில் தூண்களுக்கு உஸ்துவா...

தராவீஹ்..! வேலூர் அல்-பக்கியாத்துஸ் ஸலிஹாத் தீர்ப்பு!

படம்
தராவீஹ்..! வேலூர் அல்- பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் தீர்ப்பு!            அன்பிற்குரிய இஸ்லாமிய சொந்தங்களே! வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவிற்கு விளக்கம் வேண்டி ஒருவர் ஃபத்வா கேட்கிறார். கேள்வி:        “சிலர் தராவீஹ் தொழுகை 8 ரக் அத்கள்தான் எனக்கூறி அதற்கு புகாரி ஷரீஃபை ஆதாரம் காட்டுகின்றனர். அத்துடன் 20 ரக்அத்துகள் என்பதை கடுமையாக எதிர்த்து இருபது ரக்அத் தொழுவோருக்கு மாற்றம் செய்து குழப்பம் செய்கின்றனர்.”         இதைப்பற்றி மார்க்க அறிஞர்கள் என்ன கூறுகின்றனர்?            ”தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்களா? அல்லது இருபது ரக்அத்களா? இவ்விரண்டில் எது சரியானது என்பது பற்றி உறுதியான முறையில் பதில் தருமாறு வேண்டுகிறேன்.” பதில்:          ”சரியான (பதில் கொடுப்ப)தற்கு தவ்ஃபீக் செய்பவன் அல்லாஹ்வே!”           புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபுதாவூத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் தராவீஹ் தொழுகை (ரக் அத்)களின் எண்ணிக்கை ப...

இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா (ரஹ்)

படம்
இமாமுல் அஃளம் அபூ ஹனீஃபா (ரஹ்)                     அன்பான இஸ்லாமிய சொந்தங்களே!  நம் முன்னோர்களாகிய இமாம்கள் அல்லாஹ்வின் உதவியாலும், தங்கள் அயராத ஆராய்ச்சியாலும், தங்கள்  வாழ்நாட்களில் பெரும்பகுதியை செலவழித்து  குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆராய்ந்து பல்வேறு மார்க்க சட்டங்களை தொகுத்துத் தந்து மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் குர்ஆன், ஹதீஸின் வழியில் தீர்வுகளை எந்த பிசகுதலும் இல்லாமல் இந்த உம்மத்திற்கு சமர்பித்துச் சென்றுள்ளார்கள். உலகில் பெரும்பாலான முஸ்லிம்கள் இவர்கள் காட்டித்தந்த வழியிலேயே சென்று குர்ஆனையும், சுன்னாவையும் மிக நேர்த்தியாக பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.                            அந்த உயர்வான நான்கு இமாம்களில் கெளரவமிக்க தலைவரான இமாமுல் அஃளம் அவர்களைப் பற்றி ஒருசில தகவல்களை நாம் தெரிந்து கொள்வோம். பிறப்பு & பெயர்:             இராக் நாட்டின் மிகப் பிரபல்யமான நகரமாகிய கூஃபா நகரில் ஹிஜ்ரி 80...

நல்லோர்களும் ,நாமும் ஒன்றா?

படம்
நல்லோர்களும், நாமும் ஒன்றா? قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا إِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ  عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا     (السورة ورقم الآية:  الكهف (110).                     மனித சமூகத்தை பல கோத்திரங்களாக, பல பிரிவுகளாக,  நிறத்தால், அமைப்பால், பொருளாதாரத்தால், மொழியால் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளோடு அல்லாஹ் படைத்திருந்த போதும் மனிதர்கள் அனைவர்களின் மீதும் தன் கருணையை, அன்பை உலகில் சமமாகவே அருளுகிறான். எனினும் யார் தன்னுடைய கட்டளைகளை உலகில் செவி தாழ்த்தி, அடிபணிந்து,உலகப்பற்றற்று வாழ்கிறார்களோ அவர்களின் மீது தனிப்பெரும் அன்பை பொழிகிறான். அப்படி அல்லாஹ்வால் தனிப்பெரும் அன்பு போற்றப்பட்ட நபிமார்கள் இன்றளவிலும் நம்மோடு வாழுகிற  எத்தனையோ நல்அடியார்கள் அல்லாஹ்வின் பேரன்பில் இருக்கிறார்கள்.                            ...

இஃதிகாஃப் அதன் சட்டங்கள்

படம்
இஃதிகாஃப் அதன் சட்டங்கள்                           அன்பான சகோதரர்களே! இந்த பதிவில் நாம் இஃதிகாஃப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள இருக்கிறோம். இஃதிகாஃப் மொத்தம் மூன்று வகைப்படும்: 1. இஃதிகாஃப் மஸ்னூன்(சுன்னத்தாக்கப்பட்ட இஃதிகாஃப்) 2. இஃதிகாஃப் நஃபில் (நஃபிலான இஃதிகாஃப்) 3. இஃதிகாஃப் வாஜிப் (வாஜிபான இஃதிகாஃப்)   I. சுன்னத்தான இஃதிகாஃப்                       ரமளான் மாதத்தின் கடைசி பத்து நாட்கள் கடைபிடிக்கப்படும் இஃதிகாஃபிற்கு சுன்னத்தான  இஃதிகாஃப்   எனக் கூறப்படும். ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில்   இஃதிகாஃப் இருந்துள்ளர்கள்.  இதன் நேரம்:               ரமளானின் 20 ஆம் நோன்பு நிறைவுபெறுகின்ற நாளின் சூரிய மறைவிலிருந்து பெருநாளின் பிறை தென்படும் வரை நீடித்திருக்கும். எனவே இந்த   இஃதிகாஃபை கடைபிடிக்க நினைப்பவர்கள் பிறை 20 மஃரிப்பிற்கு முன் மஸ்ஜிதின் எல்லைக்குள...

நோயும்,நலம் விசாரித்தலும்

படம்
நோயும், நலம் விசாரித்தலும்                                அன்பிற்குரியவர்களே! நோய் என்பதும் ஆரோக்கியம் என்பதும் இறைவன் நமக்கு அளித்தஅருட்கொடை. இரண்டையுமே இறைவன் நமக்கு தந்து சோதிக்கின்றான். நோயுடன் இருப்பவர் அல்லாஹ் இந்த நோயின் மூலமாக நம் பாவங்களை மன்னிக்கின்றான். என்பதை நோயாளியும் உணர்வதில்லை ஆரோக்கியமாக இருப்பவர் தன் ஆரோக்கியம் குறித்து இறைவனுக்கு நன்றி செலுத்துவதும் இல்லை. ஒரு நோயாளிக்குதான் ஆரோக்கியத்தின் அருமை தெரியும்.   அல்லாமா ஹஸன் பஸரீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமுள்ளவனின் தலையில் உள்ள கிரீடத்தைப் போன்றது. அதன் அழகை அவன் அறியமாட்டான். எதிரில் வரும் நோயாளியே அறிந்து கொள்வார். என்று கூறினார்கள்.        ஆகவே, ஆரோக்கியம் உள்ளவர்கள் ஆரோக்கியம் தந்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, மேலும் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும்.  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மகத்தான இரு நிஃமத்துகளை தந்திருக்கிறான். அந்த இரு நிஃமத்...